Publish Date: Wed, 21 Jan 2009 (17:29 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (17:28 IST)
வாங்க, வணக்கம் என இரண்டே தமிழ் வார்த்தைகளை வைத்து காலம் தள்ளிய கதையெல்லாம் மலையேறிவிட்டது. தமிழில் நடிக்கவரும் வெளிமாநில நடிகைகள் மேக்கப்புக்கு ஆள் வைக்கிறார்களோ இல்லையோ தமிழ் டியூசனுக்கு தவறாமல் ஆள் வைக்கிறார்கள்.
கடைசிவரை தமிழ் கற்றுக் கொள்ளாத சோனியா அகர்வால்கூட நாணல் தொலைக்காட்சி தொடருக்காக தமிழ் கற்று வருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கல்லுhரிக்குப் பிறகு கோpயர் டேக் ஆஃப் ஆன தமன்னாவும் தமிழ் கற்று வருகிறார். முன்னணி நடிகர்களிடமிருந்து தொடாந்து அழைப்பு வரும் சூழலில் தமிழில் தடுமாறினால் நன்றாக இருக்காதே? அதுதான் தமிழ் டியூசன்.
மெல்லத் தமிழ் இனி வாழும்?