சூர்யா படத்தை இயக்கிய ஜாக்குவார் தங்கம் அடுத்து இந்தியா என்ற படத்தை இயக்குகிறார். சூர்யாவைப் போலவே இதுவும் ஆக்சன் படம்.
ஜாக்குவாரின் மகன் விஜய சிரஞ்சீவியே இதிலும் நாயகன். நாயகி?
அதுதான் பிரச்சனை. மகனுக்கு ஏற்ற ஜோடி இதுவரை அமையவில்லையாம். கோலிவுட், மாலிவுட், பாலிவுட் என தேடிவிட்டார். பலன் பூஜ்ஜியம்.
நாயகி புதுமுகமாக இருந்தாலும் ஜாக்குவாருக்கு சந்தோஷமே. அழகான, கவர்ச்சியான கொஞ்சம் நடிக்கவும் தெரிந்த இளம் பெண்கள் யார் வேண்டுமானாலும் ஜாக்குவாரின் கதவை தைரியமாகத் தட்டலாம்.
காத்திருக்கிறது வாய்ப்பு.