தனது ஹீரோ ஆசையை மீண்டும் தூசு தட்டுகிறார் விவேக். முடிஞ்சா பிடிச்சுக்கோ என்ற படத்தில் சார்தான் ஹீரோ.
விவேக் ஹீரோவாக நடித்த சொல்லி அடிப்பேன் இன்னும் பெட்டியை விட்டு வெளிவரவில்லை. அந்தப் படத்தை தயாரித்த இந்தியன் தியேட்டர்ஸ் நிறுவனமும் தற்போது பீல்டில் இல்லை. விவேக்கின் ஹீரோ ராசி இப்படி பிசுபிசுத்துப் போனதால் அவரை ஹீரோவாக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லாமல் போனது. சொந்த காசில் யார்தான் சூன்யம் வைப்பார்கள்?
இந்நிலையில் கருணாஸின் திண்டுக்கல் சாரதி சுமாராகப் போனதால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. இதற்காக முடிஞ்சா பிடிச்சுக்கோ என்ற ஸ்கிரிப்டை அவரே எழுதியிருக்கிறார். படத்தை இயக்கப் போவது சரவண சக்தி.
படத்தின் பெயரை விவேக் அறிவித்த மறுநிமிடமே கோடம்பாக்கத்தில் பரபர வதந்தி. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின், கேட்ச் மீ இஃப் யு கேன் படத்தின் காப்பிதான் முடிஞ்சா பிடிச்சுக்கோ கதையாம்.
அப்படிங்களா விவேக் சார்?