சென்ற ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களை வரிசைப்படுத்தினால் முதலிடம் சுப்பிரமணியபுரத்திற்கே கிடைக்கும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும் இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது. கேரளாவின் பட்டிதொட்டியெங்கும் இந்தப் படத்தில் வரும் கண்கள் இரண்டால் பாடல் ஒலித்தது.
மலையாளிகளின் மனம் கவர்ந்த இந்தப் படத்தின் திரைக்கதை மலையாளத்தில் வெளியிடப்பட்டது. கோழிக்கோட்டில் நடந்த விழாவில் காழ்ச்சா, பளிங்கு படங்களின் இயக்குனர் பிளஸ்சி புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா பெற்றுக் கொண்டார்.
சில மாதங்கள் முன் கமலின் ஹேராம், மகாநதி படங்களின் திரைக்கதை மலையாளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவே உணர்ந்தது, தமிழ் சினிமா வெற்று கமர்ஷியல் மட்டுமே என்ற மலையாளிகளின் மனப்பதிவு மாறிவருகிறது என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
வெல்டன் சசிகுமார்.