Publish Date: Tue, 20 Jan 2009 (16:27 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (16:27 IST)
மர்மயோகிக்கு கொடுத்த கால்ஷீட்டை என்ன செய்வதென்று த்ரிஷாவுக்கு குழப்பம். இந்த குழப்பத்தால் கோபிசந்துக்கு அடித்திருக்கிறது யோகம்.
யாரிந்த கோபிசந்த்? ஜெயம் படத்தில் வில்லனாக நடித்திருந்தாரே.. அவர்தான். தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துவந்த அவர் இப்போது ஹீரோவாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவர் நடிக்கும் புதிய படத்தில் த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார், கோபிசந்தின் ஜோடியாக.
இந்தப் படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் சத்யராஜ். ரஜினி, கமல் படங்களில் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முறுக்கிக் கொண்ட இவர், கோபிசந்தின் தந்தையாக வில்லத்தனம் செய்ய உள்ளார்.
சத்யராஜ் வயதான வில்லன், த்ரிஷா முன்னாள் வில்லனின் ஜோடி. அட, அந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?