Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரண்ய காண்டம் பத்தி‌ரிகையாளர் சந்திப்பு

ஆரண்ய காண்டம் பத்தி‌ரிகையாளர் சந்திப்பு
, செவ்வாய், 20 ஜனவரி 2009 (16:24 IST)
எஸ்.பி.‌பி. சரண் தயா‌ரிப்பில் உருவாகி வரும் படம் ஆரண்ய காண்டம். குமாரராஜபடத்தை இயக்குகிறார்.

படத்தின் பத்தி‌ரிகையாளர் சந்திப்பில் நடிகர்கள் ரவி கிருஷ்ணா, சம்பத், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் மற்றும் இயக்குனர், தயா‌ரிப்பாளர் கலந்து கொண்டனர்.

நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜாக்கி ஷெராஃப், மொழி என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயம்தான், ஆனால், இயக்குனர் வசனத்தை சொல்லித் தரும்போதே பு‌ரிந்து விடுவதால் தமிழ் பேசி நடிப்பது கஷ்டமாக இல்லை என்றார்.

ஜாக்கி ஷெராப்பிற்காக எஸ்.பி.பி. நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். அவரது மகனின் தயா‌ரிப்பில் நடிப்பது சந்தோஷம் என்று மேலும் அவர் கூறினார்.

ஆரண்ய காண்டத்தில் ரவி கிருஷ்ணா, சம்பத், யாஸ்மின் ஆகியோர் நடிக்கின்றனர். ஜாக்கி ஷெராஃப் டானாக வருகிறார். இத்தனை வருடங்கள் கழித்து தமிழில் நடிக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு, “இதற்குமுன் யாரும் தமிழ்ப் படத்தில் நடிக்க அழைக்கவில்லை. இப்போதுதான் அழைத்திருக்கிறார்கள், நடிக்கிறேன்” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil