Publish Date: Tue, 20 Jan 2009 (16:12 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (15:48 IST)
அலிபாபா கிருஷ்ணா, பைவ் ஸ்டார் கிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பைவ் ஸ்டார் உள்பட பல படங்களில் நடித்திருக்கும் கிருஷ்ணனுக்கு இயக்குனராக இது முதல் படம்.
அலிபாபா படத்திற்குப் பிறகு கிருஷ்ணா, தொட்டுப்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து கிருஷ்ணன் இயக்கும் படம். இந்தப் படத்துக்கு சென்னை என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டது. மத்திய சென்னை என்ற பெயரில் ஒரு படம் தயாராவதால் சென்னை என்ற பெயர் கைவிடப்பட்டு, வேறு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆக்சன் படமான இதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் புதிய பெயர், கிட்டுராஜ். இந்தப் படத்தில் கிருஷ்ணா ஜோடியாக விஜயலட்சுமி நடிக்கிறார்.