Publish Date: Tue, 20 Jan 2009 (15:45 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (15:44 IST)
கரீனா கபூர், ஷாகித் கபூர் நடித்த ஜப் வி மெட் படத்தை தமிழில் தயாரிக்கிறது, மோசர் பேர் நிறுவனம். பரத் ஷாகித் கபூர் வேடத்தில் நடிக்கிறார். கரீனா கபூர் வேடத்திற்கு ஒப்பந்தம் ஆகியிருப்பவர், தமன்னா.
ஜெயம் கொண்டான் படத்தை இயக்கிய கண்ணன் ஜப் வி மெட் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ராஜா ராணி என பெயர் வைத்திருந்தனர்.
தற்போது இதில் மாற்றம். படத்தின் பெயரை ஒருவரை ஒருவர் சந்தித்தோம் என மாற்றி வைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.