Publish Date: Mon, 19 Jan 2009 (16:37 IST)
Updated Date: Mon, 19 Jan 2009 (16:15 IST)
சின்னக் கலைவாணரின் கலையுணர்வு நீர்த்துவிட்டதா? நம்பியார், எம்.ஜி.ஆர். தொடங்கி வடிவேலு வரை பிரபலங்களை இமிடேட் செய்யும் காமெடியை மட்டுமே சமீபகாலமாக திரையில் செய்து வருகிறார் விவேக். இவரின் அடுத்து வரும் படங்களிலும் இந்த மிமிக்கிரி மேனியா தொடர்கிறது.
விரைவில் வெளிவர இருக்கும் குரு என் ஆளு படத்தில் பிரபல யோகா நிபுணர் ஆசன ஆண்டியப்பனை நினைவுப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விவேக். அவரது கதாபாத்திரத்தின் பெயர்கூட, ஆசன அழகப்பன்.
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சுந்தர் சி. நடித்துவரும் வாடா படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனை இமிடேட் செய்து நடித்து வருகிறார் விவேக்.
நகைச்சுவை எனும் அறுசுவையில் மிமிக்கிரி என்பது வெறும் ஊறுகாய். ஜனங்களின் கலைஞன் ஊறுகாயை உணவாக்கப் பார்க்கிறார்.
பார்த்து... திகட்டப் போகிறது.