கதாநாயகி கனவோடு தமிழ் திரையுலகில் கால் பதித்த சுஜாவுக்கு வாய்த்தது என்னவோ ஒத்த பாடலும் குத்து நடனமும்தான். கோடம்பாக்க அலையில் மூழ்கிப் போகாமல் சுஜாவை காப்பாற்றிய துருப்பு சீட்டுகள் இவை. எந்த தருணத்திலும் இதை மறக்க மாட்டேன் என்றார் சுஜா.
இந்த திடீர் ஸ்டேட்மெண்ட்டுக்கு என்ன காரணம்?
சுஜாவின் கனவு இரண்டு படங்களில் கைகூடியிருக்கிறது. சொல்ல சொல்ல இனிக்கும் படத்தில் நவ்தீப்புடனும், எங்கள் ஆசானில் விக்ராந்துடனும் ஜோடியாக நடிக்கிறார் சுஜா.
இளம் ஹீரோக்களின் ஜோடியாகிவிட்டீர்கள்... இனி ஒத்தைப் பாடலுக்கு குட்பைதானே என்று கேட்டதற்கு நன்றி விசுவாசத்துடன் சுஜா சொன்னவையே மேலே படித்தது.
ஹீரோயினாக நடித்தாலும் நல்ல படங்களில் ஒரு பாடலுக்கு ஆட அழைத்தால் ஓடி வந்து ஆடிவிட்டு செல்வாராம்.
சும்மா புல்லரிக்க வைக்கிறீங்களே மேடம்.