Publish Date: Mon, 19 Jan 2009 (16:36 IST)
Updated Date: Mon, 19 Jan 2009 (16:05 IST)
ஒரு படம் ஹிட்டானால் அந்தப் படத்தின் கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சனையில் தனுஷின் படிக்காதவனும் சிக்கியிருக்கிறது.
தலைநகரம், மருதமலை படங்களை இயக்கிய சுராஜ் படிக்காதவனின் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருந்தார். படம் வெளியாகும் முன்பே படத்தின் கதை என்ன என்பது பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது.
அப்போதெல்லாம் பிரச்சனையை கிளப்பாதவர்கள், படம் வெளிவந்து வெற்றி பெற்றபின், இது சுட்ட கதை என பிரச்சனையை கிளப்பியுள்ளனர். குறிப்பாக தெலுங்கில் வெளியான லட்சுமி படத்தின் அப்பட்டமான காப்பி படிக்காதவன் என்று சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
லட்சுமி படத்தைப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.