Publish Date: Mon, 19 Jan 2009 (16:36 IST)
Updated Date: Mon, 19 Jan 2009 (16:02 IST)
ராஜேஷ் எம். இயக்கியிருக்கும் விகடன் டாக்கீஸின் சிவா மனசுல சக்தி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
ஜீவா, அனுயா நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவனின் இசையும், நா. முத்துக்குமாரின் பாடல்களும் இன்னோரு பரிமாணத்தை கொடுத்திருக்கிறது. படத்தின் இயக்குனர் எப்போதும் முணுமுணுக்கும் பாடல், யுவன் இசையமைத்துப் பாடிய ஒரு கல் ஒரு கண்ணாடி என தொடங்கும் பாடல்.
“கண்மூடி கேட்டால் கரைந்து விடுவோம். அப்படியொரு இசை, அப்படியொரு வரிகள்” என சிலாகிக்கிறார். இன்னொரு பாடலை இந்தோனேஷியாவில் எடுத்திருக்கிறார்கள். ஒரு அடங்காபிடாரி மேலதானே ஆசை வச்சேன் என்ற அந்தப் பாடல் ஆக்ரோஷமான காதலை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
“பிப்.14 காதலர்கள் தினம். அதற்கு முன்பே படத்தை வெளியிடுவதென முடிவு செய்திருக்கிறோம்” என்றார் ராஜேஷ்.