Publish Date: Sat, 17 Jan 2009 (18:11 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
கஸ்தூரியை நினைவிருக்கிறதா? கதாநாயகியாக நடித்தவர் பல வருட இடைவெளிக்கு; பின் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
கஸ்தூரியின் இரண்டாவது திரைப்பிரவேசம் தநா 07 அல 4777 படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக தொடங்கியது. ஆடிய காலும் பாடிய வாயும் எப்படி சும்மா இருக்கும்? மேற்பார்வை பணியிலிருந்து திரைப்பார்வைக்கு விரைவில் தடம் மாறுகிறார்.
அஞ்சாதே அஜ்மல் நடிக்கும் கதிர்வேல் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்பந்தமாகியிருக்கிறார் கஸ்தூரி. இதற்கு முன்பும் ஒரு பாடலுக்கு ஆடிய அனுபவம் கஸ்தூரிக்கு உண்டு.
குத்தாட்ட நடிகைகளுக்கு டைட் பைட்டுக்கு ஆள் ரெடி.