Publish Date: Sat, 17 Jan 2009 (18:06 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
நந்தலாலா முடிந்து விட்டது. அடுத்து சூர்யா நடிக்கும் முகமூடி. இதுதான் நேற்றுவரை மிஷ்கினின் திட்டம். ஆனால் சூழ்நிலை அவரை வேறு மாதிரி இயக்கிக் கொண்டிருக்கிறது.
சூர்யா தற்போது நடித்துவரும் அயன் படத்துக்குப் பிறகு ஹரியின் சிங்கம், கே.எஸ்.ரவிக்குமாரின் ஆதவன் ஆகிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். முகமூடி பெரிய ப்ராஜக்ட். கமிட்டானால் வெளியே வர பல மாதங்கள் ஆகும். அந்த நீண்ட இடைவெளியை சரிகட்ட குறுகியகால தயாரிப்பாக ஹரி மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களில் நடிக்க தீர்மானித்துள்ளார்.
இந்த நேரத்தில் ஹாரர் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார் மிஷ்கின். நந்தலாலா வெளியான பின் படம் குறித்து முறைப்படி அறிவிக்க உள்ளார்.