Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்பாயி பாடலில் கருணாஸ்

Advertiesment
கருப்பாயி பாடலில் கருணாஸ்
, சனி, 17 ஜனவரி 2009 (18:05 IST)
கதாநாயகியுடன் ஆடும் யோகம் நகைச்சுவை நடிகர்களில் முன்பு கவுண்டமணிக்கு மட்டுமே வாய்த்து வந்தது. பிறகு வடிவேலு, விவேக் அந்த யோகக்கார படடியலில் இணைந்து கொண்டனர். இப்போது கருணாஸின் முறை.

திண்டுக்கல் சாரதிக்குப் பிறகு லொடுக்கின் மதிப்பு வெடுக்கென்ற உயர்ந்திருக்கிறது. ஆதிநாராயணாவே இதற்கு சாட்சி.

மீரா ஜாஸ்மின், கஜன், யோகிதா நடிக்கும் இந்தப் படத்தில், கருப்பாயி கருப்பாயி எங்கே போற.. கண்ணால சாய்ச்சுப்புட்ட லட்சம் பேர.. என்ற பாடல் இடம்பெறுகிறது. சிம்பு, ரோஷிணியுடன் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கிhர்.

குத்துப் பாடலான இது கிளைமாக்ஸுக்கு சற்றுமுன் இடம்பெறுகிறது. இதில் யோகிதாவுடன் ஆடியிருப்பவர் கருணாஸ்.

கருணாஸின் கறுப்பு திரண்டு மச்சமாக மாறியிருப்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன?

Share this Story:

Follow Webdunia tamil