Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தியாவின் டூயட்

Advertiesment
சந்தியாவின் டூயட்
, சனி, 17 ஜனவரி 2009 (18:02 IST)
ஸ்ரீவாரு பிலிம்ஸ் தயா‌ரிக்கும் படம் ஓடிப் போலாமா. சந்தியாவும், நடிகை சங்கீதாவின் தம்பி ப‌ரிமளும் நடிக்கிறார்கள். அடடா என்ன அழகு இயக்குனர் கண்மணி படத்தை இயக்குகிறார்.

டி.இமான் இசையில் இரண்டு பாடல்களை வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறார்கள். சந்தியா, ப‌ரிமள் டூயட்டான இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கம் காட்டி நடித்திருக்கிறாராம் சந்தியா.

அருவிபோல குதிக்கி
நதியை போல மனசை போட்டு உலுக்கிற..

என்று தொடங்குகிறது ஒரு பாடல். தபூ சங்கர் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இன்னொரு பாடல்,

ரகளைக்கார மாமன் நானடி
ரகளை பண்ணும் அழி நீயடி..

என தொடங்குகிறது. சந்தியா, ப‌ரிமளுடன் கோட்டா ஸ்ரீனிவாசராவ், மகாதேவன், சுமன் ஷெட்டி, தம்பி ராமையா, சுதா, அசத்தப் போவது யாரு மகேஸ்வ‌ரி ஆகியோரும் நடிக்கின்றனர்.

டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜா, ரகஸியாவுடன் இணைந்து ஆடிய குத்துப் பாடலொன்றை சமீபத்தில் சென்னை கோல்டன் பீச்சில் படமாக்கினர்.

Share this Story:

Follow Webdunia tamil