Publish Date: Sat, 17 Jan 2009 (17:58 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
விஜயின் அடுத்த படம் வேட்டைக்காரன். தரணியின் உதவியாளர் பாபு சிவன் படத்தை இயக்குகிறார். தயாரிப்பு ஏவிஎம் பாலசுப்ரமணியம்.
விஜயின் 49வது படமான இதற்கு இசையமைப்பவர் விஜய் ஆண்டனி. விஜய் படம் ஒன்றிற்கு இவர் இசையமைப்பது இதுவே முதல்முறை. காதலில் விழுந்தேன் படத்துக்குப் பிறகு அனைவரும் எதிர்பார்க்கும் இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறார், விஜய் ஆண்டனி. அதன் பிரதிபலிப்புதான் இந்த வாய்ப்பு.
மேலும், இயக்குனர் சசி தனது டிஷ்யூம் படத்துக்காக விஜய் ஆண்டனியை ஒப்பந்தம் செய்தாலும், அவரது இசையமைப்பில் முதலில் வெளிவந்த படம் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிய சுக்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டைக்காரனில் விஜய் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.