Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வில்லு – 100 சதவீத வசூல்

Advertiesment
வில்லு – 100 சதவீத வசூல்
, செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:57 IST)
நேற்று வெளியான விஜயின் வில்லு தமிழ்நாடு முழுவதும் நூறு சதவீத வசூலை ஈட்டியுள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வில்லு நேற்று வெளியானது. வழக்கம்போல் பட்டாசு வெடித்தும், விஜய் படத்துக்கு பாலபிஷேகம் செய்தும் பட ‌ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடினர்.

சென்னை கமலா திரையரங்குக்கு படப்பெட்டி சாரட் வண்டியில் ரசிகர்கள் புடைசூழ கொண்டுவரப்பட்டதால் அந்தப் பகுதியில் ட்ராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு நெ‌ரிசல் ஏற்பட்டது. இந்த‌க் கொண்டாட்டங்களின் காரணமாக படக்காட்சிகள் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பிறகே ஆரம்பமானது.

தமிழ்நாட்டில் வில்லு ஓபனிங் தினமான நேற்று 100 சதவீத வசூலை‌ப் பெற்று சாதனை படைத்துள்ளது. போக்கி‌ி வெற்றியை தந்த பிரபுதேவா இயக்கியிருக்கும் படம் என்பதும் இந்த சாதனைக்கு காரணம்.

அழகிய தமிழ் மகன், குருவி படங்கள் தந்த ஏமாற்றத்தை வில்லு போக்குமா என்பது இன்னும் சில தினங்களில் தெ‌ரிந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil