Publish Date: Tue, 13 Jan 2009 (17:54 IST)
Updated Date: Tue, 13 Jan 2009 (17:53 IST)
கனா கண்டேன் படத்துக்குப் பிறகு பிருத்விராஜ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் படம், போலீஸ் போலீஸ். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படம் இரு போலீஸ் அதிகாரிகளை பற்றியது.
தெலுங்குப்பட இயக்குனர் மன்மோகன் படத்தை இயக்கி வருகிறார். காவல்துறை அதிகாரிகளாக பிருத்விராஜும், ஸ்ரீகாந்தும் நடிக்கின்றனர். ஒரே நோக்கத்திற்காக போராடும் இருவேறு வழிமுறைகள் கொண்ட காவல்துறை அதிகாரிகளைப் பற்றிய கதை இது.
இந்தப் படத்தை சன்நெட்வொர்க்கின் சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்ப் பதிப்பிற்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடி வருகிறார்கள்.