Publish Date: Tue, 13 Jan 2009 (17:47 IST)
Updated Date: Tue, 13 Jan 2009 (17:46 IST)
தமிழில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். தேவைப்பட்டால் நடிகர்களும் வரவழைக்கப்படுவார்கள். ஆனால், நடிகைகள்?
அந்தக் குறையும் விலகப் போகிறது. வெங்கட்பிரபு இயக்கும் கோவா படத்தில் ஹாலிவுட் நடிகை நடிக்கிறார். வெங்கியின் சாய்ஸ் பென்டாஸ்டிக் ஃபோர் நாயகி ஜெஸிகா.
அதேபோல் விஜய் இயக்கும் மதராசப்பட்டினம் படத்திலும் ஹாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார். விஜயின் சாய்ஸ் லூசியானா. அவர் கிடைக்காவிட்டால் இன்னொருவர். ஆனால், ஹாலிவுட் நடிகைதான் படத்தில் நடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
மதராசப்பட்டினத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். சுதந்திரப் போராட்ட காலத்தில் நடக்கும் கதை இது என்பது குறிப்பிடத்தக்கது.