Publish Date: Mon, 12 Jan 2009 (15:44 IST)
Updated Date: Mon, 12 Jan 2009 (15:34 IST)
ஹீரோயின்கள்தான் திடீர் திடீரென்று படங்களிலிருந்து மாறிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஹீரோக்களையும் தொற்றியிருக்கிறது இந்த வியாதி.
ஆட்டநாயகனில் நடித்துவரும் ஷக்தி அடுத்து பத்ரி இயக்கத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இப்போது என்ன ஆனதோ, எங்க வீட்டுப் பிள்ளையில் ஷக்தி நடிக்கவில்லை. அவருக்குப் பதில் வேறு ஹீரோவை தேடி வருகிறார்கள்.
ரசிக்கும் சீமானே, இந்திரவிழா, இடம்வலம், மா, துரோகி, மாணவர் தினம் என அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கும் ஸ்ரீகாந்த், சாமிடா வடிவுடையானின் நாஞ்சில், ஐந்தாம் திசை படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அந்தப் படத்திலிருந்து ஸ்ரீ விலகியிருக்கிறார். கால்ஷீட் பிரச்சனை விலகலுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
ஹீரோக்களின் விலகல் தொடர் கதையாகி வருவதால் கலக்கத்தில் இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள்.