Publish Date: Mon, 12 Jan 2009 (15:25 IST)
Updated Date: Mon, 12 Jan 2009 (15:25 IST)
கதையில்லாமல் படமெடுப்பவர்களும் ரீமிக்ஸ் இல்லாமல் படமெடுப்பதில்லை. ரீமிக்ஸ் இசையமைப்பாளர் என்று பெயர் வந்துவிடுமோ என்ற பயத்தில், புதிய படங்களுக்கு ரீமிக்ஸ் பாடல்கள் போடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார் டி. இமான்.
நமது விஷயத்துக்கு வருவோம். எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கும் வைகை படம் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வருகிறது. பாலா, விசாகா நடிக்கின்றனர். சபேஷ் முரளி இசை. சினேகன், நா. முத்துக்குமார் பாடல்கள் எழுதுகின்றனர்.
இந்தப் படத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பெற்ற ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். மென்மையான காதல் கதையாம் வைகை. அப்படியானால் ஆயிரம் தாமரை மொட்டு பொருத்தமாகதான் இருக்கும்.