Publish Date: Mon, 12 Jan 2009 (15:23 IST)
Updated Date: Mon, 12 Jan 2009 (15:23 IST)
மீரா ஜாஸ்மின் புதுமுகம் கஜனுடன் இணைந்து நடிக்கும் படம், ஆதிநாராயணா. இதில் யோகிதா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.
நடிகர் சிம்பு ஆதிநாராயணாவுக்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார். சமீபத்தில் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மேலும், படத்தில் இடம்பெறும் நியூ இயர் பாடலை, டிச. 31 அன்று இரவு சென்னை அண்ணா சாலையிலும், மெரீனா கடற்கரையிலும் படமாக்கியிருக்கிறார்கள்.
இந்த நியூ இயர் பாடலுக்கு கஜனும், யோகிதாவும் ஆடியுள்ளனர்.