கடல் கடந்து சென்று கம்போஸிங் செய்யும் இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் கடற்கரையில் அமர்ந்து பாடல் கம்போஸ் செய்திருக்கிறார், ஸ்ரீகாந்த் தேவா.
ஜெய், பூர்ணா நடிப்பில் பார்த்தி பாஸ்கர் இயக்கிவரும் படம் அர்ஜுனன் காதலி. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. குற்றால குளிருக்கு பயந்து ஹீரோ ஜெய் முதற்கொண்டு அனைவரும் படப்பிடிப்புக்கு தொடர்ந்து லேட்டாகவே வந்திருக்கிறார்கள்.
வேறொரு டைரக்டர் என்றால் பிபி எகிறியிருக்கும். பார்த்தி பாஸ்கர் மிஸ்டர் கூல். படப்பிடிப்புக்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு பரிசு என அறிவிக்க, நல்ல ரெஸ்பான்ஸ். பரிசு வாங்க நீ, நான் என போட்டி போட்டு படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார்கள்.
கடற்கரை விஷயத்திற்கு வருவோம். பாண்டிச்சேரிக்கு பாடல் கம்போஸிங்கிற்காக வந்த பார்த்தி பாஸ்கரும், ஸ்ரீகாந்த் தேவாவும் அறைக்குள் அடைந்து கிடக்காமல் இரவு பத்து மணிக்குமேல் கடற்கரைக்கு வந்து அங்கேயே பாடல் கம்போஸிங்கை நடத்தியுள்ளார்கள்.
இந்த பாட்டுக் கச்சேரிக்கு ஆட்கள் கூடவே, போலீஸ் வந்து கச்சேரிக்கு கட் சொல்லியிருக்கிறது. காற்று வாங்க வந்தவர்கள் கச்சேரி கேட்ட திருப்தியுடன் கலைந்து சென்றிருக்கிறார்கள்.