மங்கை தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான அரிராஜன் மீண்டும் படம் இயக்குகிறார். இந்தமுறை சினிமா உலகையே தனது கதைக் களமாக்கியிருக்கிறார்.
சினிமா உலகை பின்னணியாக வைத்து தமிழில் படங்கள் வருவது குறைவு. கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிவானேன் என்ற தற்காப்பு உணர்வுதான் இதற்கு காரணம். அதையும் மீறி படம் இயக்க துணிந்த அரிராஜனுக்கு முதலில் ஒரு சபாஷ்.
அவதாரம் 11 என தனது படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார் அரிராஜன். இந்த தலைப்பில் நடிக்க தமிழ் சினிமாவில் இருவரால் மட்டுமே முடியும். ஒருவர் இப்போதுதான் பத்து வேடங்களில் நடித்து முடித்துள்ளார். அவரிடம் கால்ஷீட் எதிர்பார்க்க முடியாது. இன்னொருவர் சத்யராஜ்.
புரட்சித் தமிழன் சம்மதித்தால் அடுத்த நாளே படத்தை தொடங்க தயாராக உள்ளார் அரிராஜன். காரணம் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.