Publish Date: Fri, 09 Jan 2009 (16:00 IST)
Updated Date: Fri, 09 Jan 2009 (16:00 IST)
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழி படத்தின் முதல் ஷெட்யூல் இரண்டுநாள் முன்பு நிறைவடைந்தது.
ரெட்டைச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். உடல்நிலை சரியில்லாததால் பாலசந்தர் படத்தில் நடிப்பாரா என்று பலரும் சந்தேகம் கிளப்பினர். அதற்கு பதில்தரும் விதமாக திருநெல்வேலியில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் பாரதிராஜாவுடன் இணைந்து நடித்தார் இயக்குனர் சிகரம்.
இரண்டாம்கட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்குகிறது. கிராமத்து கதை என்பதால் மொத்த படப்பிடிப்பையும் நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் தாமிரா.