Publish Date: Fri, 09 Jan 2009 (15:53 IST)
Updated Date: Fri, 09 Jan 2009 (15:48 IST)
மோசர் பேர் நிறுவனம் தனது சாத்வீக பாதையை கைவிட தீர்மானித்துள்ளது. இந்த திடீர் மாற்றத்துக்கு ரசிகர்களின் ரசனை குறைபாடே காரணம்.
மோசர் பேர் நிறுவனம் இதுவரை மூன்று திரைப்படங்களை தயாரித்துள்ளது. வெள்ளித்திரை, ராமன் தேடிய சீதை, பூ. சென்ற வருடம் வெளியான படங்களுடன ஒப்பிடும்போது மூன்று படங்களுமே கலாபூர்வமாக சிறந்தவை என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். ஆனால் என்ன பயன்?
கமர்ஷியலாக மூன்று படங்களுமே மோசர் பேரின் கையைக் கடித்ததை தவிர பயன் ஏதுமில்லை. இந்த படிப்பினை காரணமாக மென்மையான திரைப்படங்களுக்குப் பதிலாக ரசிகர்கள் விரும்பும் காரசாரமான படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
தற்போது படப்பிடிப்பு நடந்துவரும் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படத்திலும் கமர்ஷியல் விஷயங்களை சேர்க்க உத்தரவு போடப்பட்டுள்ளதாம். மோசர் பேருக்காக அடுத்து சசி இயக்கும் படமும் அடிதடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.