அரசியல் கட்சி தலைவர்கள்தான் தொண்டர்களை சிங்கம், புலி என்று மிருக பாசத்துடன் அழைப்பார்கள். இந்த செல்லப் பெயர்களை காக்கி சட்டைகளுக்கு சூட்டி அழகு பார்க்கிறது தமிழ் சினிமா.
எஸ்.ஜே. சூர்யா தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து இயக்கிவரும் படம் புலி. இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பவன் கல்யாண். இதே படத்தை புலி என்ற பெயரில் தமிழில் இயக்கி நடிக்க உள்ளார், எஸ்.ஜே. சூர்யா. புலி என்பது போலீஸ் அதிகாரியாக நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா - இது வாரணம் ஆயிரம் சூர்யா - நடிக்கும் சிங்கம் படத்தில் சூர்யாவுக்கு போலீஸ் அதிகாரி வேடமாம். காக்கி உடையில் சிங்கம் போல் கர்ஜிப்பதால் இந்தப் பெயராம்.
அடுத்து கரடியாக மாறப் போவது யாரோ?