மகனே என் மருமகனே படத்தில் விவேக், மிதுன் இருவரும் நாயகர்களாக நடிப்பது தெரியும். தெரியாத விஷயம் படத்தில் முக்கியமான வேடத்தில் பிரபு நடிப்பது. அதுவும் நடிகர் பிரபுவாகவே இதில் வருகிறார்.
ராஜ் நெட்வொர்க்கின் மகனே என் மருமகனே படத்தை டி.பி. கஜேந்திரன் இயக்குகிறார். நகைச்சுவை படமான இதில் சென்டிமெண்ட் காட்சிகளும் அதிகமுள்ளது. உடலுறுப்பு தானம் குறித்த காட்சிகளும் படத்தில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் அல்லது அமைச்சர் அன்புமணியை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் கஜேந்திரன். தற்போது அந்தக் காட்சியில் பிரபு நடிக்கிறார். அவர் நடிகராகவே இதில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.