நடனம் அமைப்பவர்கள் இயக்குனர்களாக மாறும்போது தாங்களே நடனம் அமைத்துக் கொள்வார்கள். அல்லது தங்களைப் போன்ற பெரிய நடன இயக்குனர்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.
பிரபுதேவா மூன்றாவதாக ஒன்றை செய்திருக்கிறார். அதாவது வில்லு படத்தில் தனது சிஷ்யர்களை நடன இயக்குனர்களாக்கியிருக்கிறார்.
விஜய் படத்துக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமில்லை. அதுவும் பிரபுதேவா படம் இயக்கும் போது அப்படியொரு வாய்ப்புக்கு கனவு காண்பதே அபத்தமானதுதான்.
இதையெல்லாம் உடைத்திருக்கிறது பிரபுதேவாவின் விசால மனசு. தனது ஐந்து சிஷ்யர்களுக்கு வில்லு படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். பாடல்களும் வித்தியாசமாக, அட்டகாசமாக வந்திருக்கின்றனவாம்.
சிஷ்யர்களுக்கு அவர் பிரபுதேவா அல்ல குருதேவா.