Publish Date: Fri, 09 Jan 2009 (15:46 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (14:06 IST)
நார்வேயில் பேராசிரியராக இருப்பவர், ஹரிதாஸ். மலையாளியான இவர் தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார். படத்தின் பெயர் மீண்டும் மீண்டும்.
ஹரிதாஸுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதுடன் படம் எடுப்பதிலும் நாட்டம் அதிகம். இதுவரை எட்டு குறும்படங்களை இயக்கி சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளார். 1994-ல் மூணுல ஒண்ணு என்ற முழு நீள மலையாளப் படத்தை இயக்கி மலையாள படவுலகிலும் தடம் பதித்துள்ளார்.
படம் எடுப்பதில் இத்தனை முன் அனுபவம் இருந்தாலும் இதுவரை ஹரிதாஸ் கமர்ஷியல் படம் இயக்கியதில்லை. அந்தக் குறையை போக்கும் விதமாக அவர் எடுக்கும் படம்தான் மீண்டும் மீண்டும்.
கமர்ஷியல் என்றதும் குத்துப் பாட்டு, வெட்டுக் குத்து என்று எக்குத்தப்பாக கற்பனையை ஓடவிடாதீர்கள். அது எல்லாம் இல்லாத கமர்ஷியல் படமாம்.
21 செஞ்சுரி என்ற பட நிறுவனம் ஹரிதாஸின் படத்தை தயாரிக்கிறது.