Publish Date: Fri, 09 Jan 2009 (15:46 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (14:03 IST)
ராணுவ கதைகளை மட்டும் படமாக்கிவரும் மேஜர் ரவி இறுதியில் தனது கதைக்கேற்ற நடிகரை கண்டடைந்து விட்டார்.
தமிழில் மோகன்லால், ஜீவா நடிப்பில் அரண் படத்தை இயக்கிய ரவி அடுத்தடுத்து இயக்கிய மலையாளப் படங்களும் ராணுவத்தை மையமாக கொண்டவையே. மோகன்லால், கமல் இருவரையும் வைத்து படம் இயக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் இறுதிவரை நிறைவேறவில்லை.
இந்நிலையில் மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார் மேஜர் ரவி. இதனை ஐ.டி.ஏ. பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாயகனாக நடிப்பது தேச பக்தி கதைகளின் நாயகன், அர்ஜுன்.
மேஜர் ரவியின் படத்துக்கு இவரைவிட சரியான ஹீரோ கிடைக்க மாட்டார்.