சம்பளத்துடன் தான் நடிக்கும் படங்களின் சென்னை உரிமையையும் வாங்குவது விஜயின் நெடுநாளைய பழக்கம். அதன்படி வில்லு படத்தின் சென்னை விநியோக உரிமையையும் வாங்கியிருக்கிறார்.
தனது முந்தைய இரு படங்கள் சரியாகப் போகாததால் சில அதிரடி முடிவுகளை விஜய் எடுத்துள்ளார். முதலாவதாக அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். படத்தை அதிக நாட்கள் ஓடவைக்கவே இந்த அதிரடி குறைப்பு.
மேலும், தனக்கு எந்தெந்த திரையரங்குகள் ராசியானவையோ அந்த திரையரங்குகளுக்கு மட்டுமே வில்லு படத்தை திரையிடும் உரிமையை கொடுத்துள்ளார். இதனால் சிட்டியின் சில மல்டி பிளிக்ஸ்களில் வில்லு படம் வெளியாகவில்லை.
சென்டிமெண்ட் வேலை செய்கிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.