சர்வம் படத்தில் நடித்துவரும் ஆர்யா மூன்று இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறார். கிரீடம், பொய் சொல்ல போறோம் படங்களை இயக்கிய விஜய், கலாபக் காதலனை இயக்கிய இகோர், இறுதியாக பூ சசி.
இதில் விஜயின் மதராஸப்பட்டணம், இகோரின் ஆறுவது சினம் ஆகிய படங்களில் ஆர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை மென்மையான காதல் படங்களை கொடுத்துவந்த சசி முதல் முறையாக ஆக்சன் படமொன்றை இயக்குகிறார். மோசர் பேர் தயாரிக்கும் இப்படத்தின் கதையை அவர் ஆர்யாவிடம் கூறியுள்ளார்.
சசியின் படத்தில் நடிப்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை ஆர்யா என்கிறார்கள். மே மாதம் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் சசி.