பிப்ரவரியில் இரண்டு நடிகைகள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் சங்கீதா மற்றும் காவ்யா மாதவன்.
சங்கீதாவினுடையது காதல் திருமணம். இவர் திருமணம் செய்யப் போவது பாடகர் க்ரிஷை. க்ரிஷின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், காதல் வலிமையானது அல்லவா? பிப்ரவரி 1ம் தேதி கோயிலில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது.
பிப்ரவரி 5ம் தேதி நிஷால் சந்திரா என்பவரை மணக்கிறார், காவ்யா மாதவன். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது. கர்நாடகாவிலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நடைபெறும் இந்தத் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு.
இவர்கள் இருவரில் சங்கீதா தொடர்ந்து நடிப்பது என்ற முடிவை எடுத்துள்ளார். காவ்யா மாதவன்? திருமணம் முடிந்ததும் கணவருடன் துபாய் சென்று இல்லறத்தை தொடங்க உள்ளார்.
கலை உலகுக்கு இழப்புதான்.