Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாண்டியராஜனின் பசங்க

Advertiesment
பாண்டியராஜனின் பசங்க
, வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:40 IST)
சேரனிடம் பல படங்களுக்கு உதவியாளராக பணிபு‌ரிந்தவர் பாண்டியராஜன். இவர் முதன் முறையாக இயக்கும் படத்தின் பெயர், பசங்க.

சுப்ரமணியபுரம் படத்தை தயா‌ரித்து, இயக்கி நடித்த சசிகுமார் பசங்க படத்தை தயா‌ரிக்கிறார். சமுத்திரக்கனியின் நாடோடிகள் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சசிகுமார். இவரைப் பார்க்கும் அனைவரும் தவறாமல் கேட்கும் கேள்வி, இனி படம் இயக்க மாட்டீர்களா?

அவர்களுக்கெல்லாம், படம் இயக்குவதுதான் என்னுடைய முதல் விருப்பம் என தேன் தடவிய பதிலை தருகிறார். இவரது தயா‌ரிப்பில் வெளிவர இருக்கும் பசங்க, உண்மையிலேயே பசங்களை பற்றிய படம். முழுக்க குழந்தைகளின் உலகத்தை‌ச் சொல்லப் போகிறாராம் பாண்டியராஜன்.

தமிழில் குழந்தைகள் பற்றிய படங்கள் மீது குவிந்துவரும் கவனம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். தாமிரா இயக்கும் ரெட்டச்சுழி படமும் குழந்தைகளின் உலகை பிரதானமாக சொல்லும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil