Publish Date: Fri, 09 Jan 2009 (15:40 IST)
Updated Date: Wed, 07 Jan 2009 (14:36 IST)
கமல், மோகன்லால் இணைந்து நடிப்பதாக வரும் இரண்டாவது செய்தி இது. அரண் படத்தை இயக்கிய மேஜர் ரவியின் படத்தில் கமலும், மோகன்லாலும் இணைந்து நடிப்பதாக முன்பு சொல்லப்பட்டது. மோகன்லால் தயாராக இருந்தும், கமலின் கால்ஷீட் ஒத்துவராததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்தியில் வெளியான தி வெனெஸ்டே படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க கமல் ஆர்வம் காட்டுகிறார். அவருடன் மம்முட்டி நடிப்பார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் மம்முட்டி நடிக்கவில்லையாம். அவருக்குப் பதில் மோகன்லால் நடிக்கிறார்.
இந்தியில் நஸ்ருதின் ஷா நடித்த வேடத்தில் கமலும், அனுபம் கெர் வேடத்தில் மோகன்லாலும் நடிப்பார்கள் என தெரிகிறது.
இந்த தகவல்களை கமல் தரப்போ, தி வெனெஸ்டே தயாரிப்பாளர்கள் யு டிவி-யோ இதுவரை உறுதி செய்யவில்லை என்பது முக்கியமானது.