நடிகர் ராதாரவியின் மகனும் விரைவில் நடிக்க வருகிறார். மகனுக்காக தானே படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார், ராதாரவி.
தமிழ் சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்களில் எண்பது சதவீதத்தினர் திரையுலகினரின் வாரிசுகள் என்றால் மிகையில்லை.
அந்தப் பெரிய பட்டியலில் ராதாரவியின் மகனும் இணைகிறார். மகனை ஹீரோவாக்க ராதாரவியே படம் தயரிக்கும் முடிவெடுத்துள்ளார். விரைவில் படம் குறித்த ஆர்ப்பாட்டமான விளம்பரத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
ராதாரவியின் இன்னொரு மகனும் சினிமாவில்தான் இருக்கிறார். ப்ரியதர்ஷனிடம் உதவியாளராக இருக்கும் இவர், இந்தியில் படம் இயக்க முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி வருகிறார்.