Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷின் புதிய முயற்சி

Advertiesment
தனுஷின் புதிய முயற்சி
, வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:38 IST)
அடுத்து வெளிவர இருக்கும் தனுஷ் படம் படிக்காதவன். சுரா‌ஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

தமன்னா தனுஷ் ஜோடியாக நடித்திருக்கும் இந்த கமர்ஷியல் படத்தில் ஒரு காட்சியில் அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு போல் கால்களை மடக்கி கஷ்டப்பட்டு நடித்துள்ளாராம் தனுஷ். எதற்காக இந்தக் காட்சி என்பதை ரகசியமாக வைத்துள்ளார்கள்.

சூர்யா, விக்ரம் போன்றவர்கள் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி நடிப்பதுபோல் தானும் மாற வேண்டும் என்பது தனுஷின் விருப்பம், அதன் வெளிப்பாடுதான் இந்த குள்ள அப்பு முயற்சி என்கிறார்கள் கோலிவுட்டில்.

நல்ல முயற்சி, தொடர்ந்து செய்யுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil