Publish Date: Fri, 09 Jan 2009 (15:37 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (20:43 IST)
காமெடி நடிகர்கள் குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஹீரோவாக ஜெயித்த கருணாஸ் காமெடியுடன் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் வேடங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார். அதேபோல் இதுவரை சிரிக்க வைத்த விவேக் ரசிகர்களை அழ வைக்கப் போகிறார்.
ராஜ் நெட்வொர்க் தயாரிப்பில் டி.பி. கஜேந்திரன் இயக்கிவரும் மகனே என் மருமகனே படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக விவேக் நடித்து வருகிறார். இதில் கிராமத்து பாஷையில் முதல் பாதியில் காமெடி செய்பவர் இரண்டாவது பாதியில் சென்டிமெண்டில் அழ வைப்பாராம்.
அதாவது பொறுப்பில்லாமல் திரியும் அவர் தனது பொறுப்பை உணர்ந்து திருந்துவதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். விவேக்கின் நடிப்பைப் பார்த்து அனைவரும் கண்கலங்குவர் என்று அடித்து சொல்கிறார் கஜேந்திரன்.
இதில் விவேக்குடன் இன்னொரு ஹீரோவாக மிதுன் நடிக்கிறார்.