மாரிசன், இடும்பன் புராண கதாபாத்திரங்களை வைத்து இயக்குனர் ராஜு ஈஸ்வரன் இயக்கிய பஞ்சாமிர்தம் தமிழகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
பொதுவாக தமிழ்ப் படங்கள் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்படுவதில்லை. கேரளாவில் தமிழில் வெளியாகும் படங்கள் சர்வசாதாரணமாக நூறு நாட்கள் ஓடுவது அனைவரும் அறிந்த உண்மை. முதன் முறையாக பஞ்சாமிர்தத்தை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
மாரிசனாக ஜெயராம் நடித்திருப்பதால் படம் கேரளாவிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.