Publish Date: Fri, 09 Jan 2009 (15:34 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (12:40 IST)
திருமணமாகி சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த கனிகா மீண்டும் நடிக்க வருகிறார். ஜெயராம் ஜோடியாக அவர் நடிக்கும் மலையாளப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான கனிகாவுக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே கூறலாம். அஜித் ஜோடியாக நடித்த வரலாறு இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். இவர் கடைசியாக நடித்தப் படம், மம்முட்டியின் பழஸிராஜா. இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் சத்தியன் அந்திக்காடின் புதிய படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார், கனிகா. கேரளாவின் குட்ட நாடு பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இளையராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.
நல்ல வேடங்கள் அமைந்தால் தமிழிலும் நடிக்க தயாராக உள்ளார், கனிகா.