Publish Date: Fri, 09 Jan 2009 (15:33 IST)
Updated Date: Mon, 05 Jan 2009 (17:58 IST)
ராமன் தேடிய சீதைக்குப் பிறகு விமலா ராமன் நடிக்கும் படம் காதல் தோழி.
பிளஸ் டூ படிக்கும் மாணவன் நண்பர்களின் வற்புறுத்துதல் காரணமாக தனது தோழியை காதலிக்க ஆரம்பிக்கிறான். இந்த திடீர் மாற்றத்தை தோழி ஏற்றுக் கொண்டாளா என்பதே காதல் தோழியின் கதை.
ஊட்டி குளிரில் தயாராகிவரும் இந்தப் படத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி புதுமுகம் அர்ச்சனா. டீன் ஏஜ் காதலைச் சொல்லும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் விமலா ராமன் நடிக்கிறார்.
ஸ்ரீ சரவணபவ மூவிஸ் சார்பில் விஜயலட்சுமி ராமமூர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குவது நிதின் ராமகிருஷ்ணன். டீன் ஏஜ் கதையை இயக்கும் இவருக்கும் வயது 17 தான் என்பது ஆச்சரியமான ஒற்றுமை.
படத்துக்கு வி. தஷி இசையமைக்கிறார்.