இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறாராம் விக்னேஷ்வரன். இதில் பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலேயும் அடக்கம். யாருடைய படத்தில் நடித்தென்ன? இன்னும் புதுமுகங்களைப் போல் வெளியே தெரியாமல் இருப்பதில் விக்னேஷ்வரனுக்கு ரொம்ப வருத்தம்.
விரைவில் வெளிவர இருக்கும் குடியரசு மற்றும் ஈசா படங்கள் தனது நிலையை மாற்றும் என நம்பிக்கையோடு இருக்கிறார். குடியரசு படத்தில் பத்திரிகையாளராக வருகிறார் விக்னேஷ்வரன். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே கதை.
ஈசா படத்தில் உப்பளத்தில் வேலை பார்க்கும் இளைஞனாக நடிக்கிறார். ஆக்சன் படமான இதனை பாலகணேஷ் இயக்குகிறார். ஜே.கே. கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிருஷ்ணா தயாரிக்கிறார். உப்பளத்தில் எதிரிகளுடன் விக்னேஷ்வரன் மோதும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இதில் திருமகன் லக்ணா ஹீரோயினாக நடிக்கிறார்.