ஈழம் என்று பேசினாலே இழுத்து ஜெயிலில் போடும் கலியுகத்தில் பிரபாகரன் என்ற பெயரில் தயாராகிறது தமிழ்ப் படம் ஒன்று. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் உண்மை.
சாந்தி ஜீவா மூவி இண்டர்நேனல் சார்பில் சி.எம். அமர ஜீவா, சாந்தி அமர ஜீவா இணைந்து பிரபாகரன் படத்தை தயாரிக்கின்றனர். புதுமுகங்கள் கர்ணா, ரூபஸ்ரீ, ஸ்ரீஜெய் ஆகியோர் நடிக்கின்றனர்.
செந்தமிழன் வசனம் எழுத, பா. விஜய், சினேகன், முத்து விஜயன், ஆண்டாள் ப்ரியதர்ஷினி ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறவர் ரா.நா. புவி.
படத்தின் பெயர் பிரபாகரன் என்றதும் போரைப் பற்றிய படமோ என் நினைக்கத் தோன்றும். ஆனால் இது ஃபோனை பற்றிய படமாம். செல்ஃபோனை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகின்றனர். பரத்வாஜ் இசையமைக்க துரை கே. வெங்கட் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.