திமிரு படத்தின் இயக்குனர் தருண்கோபி என்றாலும் படத்தின் பெரும்பாலான காட்சிகளை எடுத்தவர், விஷால்.
குறிப்பாக ஹாஸ்டல் கேன்டீனில் தன்னை தாக்கும் ரவுடி மாணவர்களுக்கு பதிலடி கொடுக்கும் காட்சியை வடிவமைத்து அதனை முழுமையாக எடுத்தவர் படத்தில் ஹீரோவாக நடித்த விஷால்தான். இதனை அவரே பேட்டியில் ஒப்புக் கொண்டிருந்தார்.
திமிருவில் தொடங்கிய இந்த இயக்குனர் பணியை விடாமல் தொடர்ந்து வருவதாக விஷால் மீது புகார் படிக்கிறார்கள் அவருடன் பணிபுரிகிறவர்கள். நடிப்பை கவனிக்காமல் இயக்கம் எடிட்டிங் என பிற துறைகளில் விஷால் மூக்கை நுழைப்பதால்தான் சத்யம் படம் ஊற்றிக் கொண்டது என வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
சத்யம் தோல்வியால் அந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிய விஷால், அய்யப்பன் இயக்கும் தோரணை படத்தில் முழுக்க புதிய ஆட்களை நியமித்திருக்கிறார்.
ஆட்களை மாற்றினால் போதுமா? தானும் மாற வேண்டாமா? திமிருவில் தொடங்கிய இயக்குனர் வேலையை தோரணையிலும் தொடர்கிறாராம்.
சத்தம் போட்டு சொல்ல முடியாமல் சைலண்டாக முணுமுணுக்கிறார்கள் யூனிட்டில்.