Publish Date: Fri, 09 Jan 2009 (15:29 IST)
Updated Date: Mon, 05 Jan 2009 (14:00 IST)
செல்வராகவனுடனான பிரிவுக்குப் பிறகு அறிமுக இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைக்க ஆர்வம் காட்டுகிறார் யுவன் ஷங்கர் ராஜா. ரமணா ஆர்ட்ஸ் என்ற புதிய படநிறுவனம் தயாரிக்கும் நூறு படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.
ஏ.ஆர். முருகதாஸ், ஏ. வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், கிங்ஸ்லி. இவர் முதன் முறையாக இயக்கும் படம் நூறு.
எஸ்.பி.பி. சரண் தயாரித்துவரும் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் ஹீரோ ராம கிருஷ்ணன் நூறு-வின் நாயகன். தர்னா, அர்ச்சனா என்று இரு மலையாளிகள் ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள்.
இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். ரமணா ஆர்ட்ஸ் சார்பில் படத்தை தயாரிப்பவர், சம்பத்குமார். இவரும் ஏ.ஆர். முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.