Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீமானுக்கு பண உதவி

Advertiesment
சீமானுக்கு பண உதவி
, வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:29 IST)
ஈழத் தமிழருக்கு குரல் கொடுத்ததற்காக இரண்டாவது முறையாக சிறைக் கம்பிகளுக்குப் பின்னே தள்ளப்பட்டுள்ளார், இயக்குனர் சீமான்.

முதலமுறை தமிழ் திரைப்படத் துறையினர் ராமேஸ்வரத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக சீமானும், அமீரும் கைது செய்யப்பட்ட போது திரையுலகமே திரண்டு சிறையிலிருந்த சீமானையும், அமீரையும் காணச் சென்றது. அவர்கள் கைதுக்காக குரல் கொடுத்தது.

ஆனால் இந்தமுறை யாரையும் காணோம். காற்றுக்கென்ன வேலி படத்தை இயக்கிய தங்கராஜ் மட்டுமே சீமானை சிறையில் சென்று பார்த்திருக்கிறார். தமிழ் உணர்வாளர்களும் பார்த்து வருகின்றனர். திரையுலகினர் சீமானை சந்திக்காதது மட்டுமல்ல, அவரைப் பற்றி பேசவே தயங்குகின்றனர்.

இந்நிலையில் சீமானின் வழக்கை நடத்துவதற்கான பணத்தை தனியாளாக வசூலித்து வருகிறார் தங்கராஜ். தனது காற்றுக்கென்ன வேலி படத்தை மீண்டும் திரையிட்டு அதில் கிடைக்கும் பணத்தை சீமானின் வழக்கு செலவுக்கு தரவும் திட்டமிட்டுள்ளார்.

தமிழனுக்காக குரல் கொடுப்பவரின் நிலை தமிழகத்தில் இன்று இப்படிதான் இருக்கிறது என்பது அனைவரும் வெட்கப்பட வேண்டிய வி­யம்.

Share this Story:

Follow Webdunia tamil