Publish Date: Tue, 06 Jan 2009 (23:26 IST)
Updated Date: Sat, 03 Jan 2009 (16:12 IST)
நான் கடவுள் படத்திற்காக ஆர்யா பல வருடங்களாக காத்திருப்பது தெரியும். கொடுமை என்னவென்றால் அவர் நடித்த படமொன்றும் நான் கடவுள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
புஷ்கர்-காயத்ரி தம்பதியின் ஓரம்போ படத்தை தெலுங்கில் ஹலோ ஆட்டோ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து தயாராக வைத்துள்ளனர். ஓரம்போவில் நடித்த ஆர்யாவுக்கும் சரி, உடன் நடித்த பூஜாவுக்கும் சரி ஆந்திராவில் சொல்லிக் கொள்ளும்படி ரசிகர் வட்டம் இல்லை.
அதேநேரம் பாலாவின் படங்களுக்கு அங்கு நல்ல மார்க்கெட் உள்ளது. நான் கடவுள் படம் தமிழில் வெளியாகும் அதே நாள் தெலுங்கிலும் வெளியாகிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் படம் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
ஓரம்போவில் நடித்த ஆர்யா, பூஜா ஜோடிதான் நான் கடவுளிலும் நடித்திருப்பதால், நான் கடவுள் படத்துக்குப் பிறகு தெலுங்கு ஹலோ ஆட்டோவை ரிலீஸ் செய்வது என்ற முடிவுடன் நான் கடவுளுக்காக காத்திருக்கிறார்ள்.
உறுமீன் வரும்வரை காத்திருப்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.