Publish Date: Tue, 06 Jan 2009 (23:26 IST)
Updated Date: Sat, 03 Jan 2009 (16:09 IST)
சிலம்பரசன் என்ற சிம்பு மேக்கப் போட ஆரம்பித்து 25 வருடங்களாகிறதாம். இன்னொரு விசேஷம், சிலம்பாட்டம் அவரது 24வது படம்.
25வது ஆண்டையும், 25வது படத்தையும் சிறப்பாக்க என்ன செய்வது என்ற யோசனையில் இருக்கிறாராம் டி.ஆரின் மகன். சிலம்பாட்டத்துக்குப் பிறகு சரத்குமாரின் மகள் வரலட்சுமியுடன் நடிக்கயிருந்த போடா போடி கிட்டத்தட்ட ட்ராப்பாகும் நிலை.
போடா போடி குறித்து வாய் திறக்க மறுக்கும் சிம்பு, பாதியில் நின்றுபோன கெட்டவன் படத்தை மீண்டும் தூசிதட்டும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. கெட்டவனை தயாரிக்க நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி ஆர்வம் காட்டுவதால் கெட்டவனுக்கு பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது.
எந்தப் படமாக இருந்தாலும் அதனை எப்படியும் ஹிட்டாக்குவது என்ற முனைப்பில் இருக்கிறார் சிம்பு. வெற்றிபெற நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.